அருளாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும் அணுத்துணையும் சினங்காமம் அடையாமை வேண்டும் மருளாய உலகமெலாம் மருள்நீங்கி ஞான மன்றிடத்தே வள்ளல்உனை வாழ்த்தியிடல் வேண்டும் இருளாமை உறல்வேண்டும் எனைஅடுத்தார் சுகம்வாய்ந் திடல்வேண்டும் எவ்வுயிரும் இன்படைதல் வேண்டும் பொருளாம்ஓர் திருவடிவில் உடையாயும் நானும் புணர்ந்துகலந் தொன்றாகிப் பொருந்துதல்வேண் டுவனே