பாடல் எண் :32
அருளார் அமுதே சரணம் சரணம்
அழகா அமலா சரணம் சரணம்
பொருளா எனைஆள் புனிதா சரணம்
பொன்னே மணியே சரணம் சரணம்
மருள்வார்க் கரியாய் சரணம் சரணம்
மயில்வா கனனே சரணம் சரணம்
கருணா லயனே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்
பாடல் எண் :584
அருளார் அமுதப் பெருங்கட லேதில்லை அம்பலத்தில்
பொருளார் நடம்புரி புண்ணிய னேநினைப் போற்றுகிலேன்
இருளார் மனத்தின் இடர்உழந் தேன்இனி யாதுசெய்கேன்
மருளார் மலக்குடில் மாய்ந்திடில் உன்அருள் வாய்ப்பதற்கே
பாடல் எண் :2755
அருளார் அமுதே அரசேநின் அடியேன் கொடியேன் முறையேயோ
இருள்சேர் மனனோ டிடர்உழந்தேன் எந்தாய் இதுதான் முறையேயோ
மருள்சேர் மடவார் மயலாலே மாழ்கின் றேன்நான் முறையேயோ
தெருளோர் சிறிதும் அறியாதே திகையா நின்றேன் முறையேயோ
பாடல் எண் :4987
அருளார் சோதி என்னுள் விளங்க அளித்த காலத் தே
அடியேன் குறைகள் யாவும் தவிர்ந்த திந்த ஞாலத் தே
பொருளாய் எனையும் நினைக்க வந்த புதுமை என்னை யோ
பொன்னென் றைய மதிப்ப துதவாத் துரும்பு தன்னை யோ எனக்கும் உனக்கும்
Dear sanmarges . You are welcome to register at FREE of cost.