அருளுதிக்குந் தருணத்தே அமுதவடி வாகி ஆனந்த மயமாகி அமர்ந்ததிரு வடிகள் இருளுதிக்கும் இரவினிடை வருந்தநடந் தருளி யானிருக்கும் மனைக்கதவந் திறப்பித்தங் கடைந்து மருளுதிக்கும் மனத்தேனை வரவழைத்து நோக்கி மகிழ்ந்தெனது கரத்தொன்று வழங்கியசற் குருவே தெருளுதிக்கும் மணிமன்றில் திருநடஞ்செய் அரசே சிவபெருமான் நின்கருணைத் திறத்தைவியக் கேனே