அருளுருவாய் ஐந்தொழிலும் நடத்துகின்ற அடிகள் அசைந்துவருந் திடஇரவில் யானிருக்கும் இடத்தே தெருளுருவின் நடந்துதெருக் கதவுதிறப் பித்துச் சிறியேனை அழைத்தெனது செங்கையில்ஒன் றளித்து மருளுருவின் மற்றவர்போல் மயங்கேல்என் மகனே மகிழ்ந்துதிரு அருள்வழியே வாழ்கஎன உரைத்தாய் இருளுருவின் மனக்கொடியேன் யாதுதவம் புரிந்தேன் எல்லாம்வல் லவனாகி இருந்தபசு பதியே