அருளெலாம் அளித்த அம்பலத் தமுதை அருட்பெருஞ் ஸோதியை அரசை மருளெலாம் தவிர்த்து வாழ்வித்த மருந்தை வள்ளலை மாணிக்க மணியைப் பொருளெலாம் கொடுத்தென் புந்தியில் கலந்த புண்ணிய நிதியைமெய்ப் பொருளைத் தெருளெலாம் வல்ல சித்தைமெய்ஞ் ஞான தீபத்தைக் கண்டுகொண் டேனே