பாடல் எண் :1347
அருளே வடிவாய் அம்பலத்தே ஆடும் பெருமான் அடிகள்தமைத்
தெருளே வடிவாம் அடியவர்போல் சிறியேன் கண்டேன் சீர்உற்றேன்
மருளே வடிவேன் ஆதலினால் மறந்தே பிரிந்தே மதிகெட்டேன்
இருளேர் மனத்தேன் அவர்தமைநான் இன்னும் ஒருகால் காண்பேனோ
பாடல் எண் :2811
அருளே அறிவே அன்பேதெள் ளமுதே மாதர் அரசேமெய்ப்
பொருளே தெருளே மாற்றறியாப் பொன்னே மின்னே பூங்கிளியே
இருளேய் மனத்தில் எய்தாத இன்பப் பெருக்கே இவ்வடியேன்
மருளே தவிர்த்த சிவகாம வல்லி நினக்கே வந்தனமே
கட்டளைக் கலித்துறை
பாடல் எண் :3598
அருளே வடிவாம் அரசேநீ
அருளா விடில்இவ் வடியேனுக்
கிருளே தொலைய அருளளிப்பார்
எவரே எல்லாம் வல்லோய்நின்
பொருளேய் வடிவிற் கலைஒன்றே
புறத்தும் அகத்தும் புணர்ந்தெங்குந்
தெருளே யுறஎத் தலைவருக்குஞ்
சிறந்த அருளாய்த் திகழ்வதுவே
பாடல் எண் :4057
அருளே பழுத்த சிவதருவில்அளிந்த பழந்தந் தடியேனைத்
தெருளே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
மருளே முதலாம் தடைஎல்லாம்தீர்ந்தேன் நின்பால் வளர்கின்றேன்
பொருளே இனிநின் தனைப்பாடிஆடும் வண்ணம் புகலுகவே
பாடல் எண் :5479
அருளே உணர்த்த அறிந்துகொண்டேன்
அடுத்த தருணம் இதுஎன்றே
இருளே தொலைந்த திடர்அனைத்தும்
எனைவிட் டகன்றே ஒழிந்தனவால்
தெருளே சிற்றம் பலத்தாடும்
சிவமே எல்லாம் செய்யவல்ல
பொருளே இனிநான் வீண்போது
போக்க மாட்டேன் கண்டாயே
Dear sanmarges . You are welcome to register at FREE of cost.