அருள்அர சேஅருட் குன்றேமன் றாடும் அருளிறையே அருள்அமு தேஅருட் பேறே நிறைந்த அருட்கடலே அருள்அணி யேஅருட் கண்ணேவிண் ணோங்கும் அருள்ஒளியே அருள்அற மேஅருட் பண்பேமுக் கண்கொள் அருட்சிவமே