அருள்செய் நீறிடார் அமுதுனக் கிடினும் அம்ம லத்தினை அருந்துதல் ஒழிக தெருள்கொள் நீறிடும் செல்வர்கூழ் இடினும் சேர்ந்து வாழ்த்திஅத் திருஅமு துன்க இருள்செய் துன்பநீத் தென்னுடை நாவே இன்ப நல்அமு தினிதிருந் தருந்தி மருள்செய் யானையின் தோலுடுத் தென்னுள் வதியும் ஈசன்பால் வாழுதற் பொருட்டே