அருள்பழுக்கும் கற்பகமே அரசே முக்கண் ஆரமுதே நினைப்புகழேன் அந்தோ வஞ்ச மருள்பழுக்கும் நெஞ்சகத்தேன் வாளா நாளை வாதமிட்டுக் கழிக்கின்றேன் மதியி லேனை வெருள்பழுக்கும் கடுங்காட்டில் விடினும் ஆற்று வெள்ளத்தில் அடித்தேக விடினும் பொல்லா இருள்பழுக்கும் பிலஞ்சேர விடினும் அன்றி என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்