அருள்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும் அரும்பெருஞ் சோதியே எனது பொருள்வளர் அறிவுக் கறிவுதந் தென்னைப் புறம்விடா தாண்டமெய்ப் பொருளே மருவும்ஓர் நாத வெளிக்குமேல் வெளியில் மகிழ்ந்தர சாள்கின்ற வாழ்வே பருவரல் நீக்கி இனித்திட எனக்கே பழுத்தபே ரானந்தப் பழமே