அருள்வழங்குந் திலகவதி அம்மை யார்பின் அவதரித்த மணியேசொல் லரசே ஞானத் தெருள்வழங்கும் சிவநெறியை விளக்க வந்த செழுஞ்சுடர்மா மணிவிளக்கே சிறிய னேனை இருள்வழங்கும் உலகியல்நின் றெடுத்து ஞான இன்னருள்தந் தாண்டருள்வாய் இன்றேல் அந்தோ மருள்வழங்கும் பவநெறியிற் சுழல்வேன் உய்யும் வகைஅறியேன் நின்னருட்கு மரபன் றீதே