அருள்விளங்கும் உள்ளகத்தே அதுஅதுவாய் விளங்கும் அணிமலர்ச்சே வடிவருத்தம் அடையநடந் தருளிப் பொருள்விளங்கா நடுஇரவில் நானுறையும் இடத்தே போந்துதெருக் காப்பவிழ்க்கப் புரிந்தெனைஅங் கழைத்துத் தெருள்விளங்கும் ஒருபொருள்என் செங்கைதனில் அளித்தாய் சிவபெருமான் பெருங்கருணைத் திறத்தினைஎன் என்பேன் மருள்விளங்கி உணர்ச்சியுறத் திருமணிமன் றிடத்தே மன்னுயிர்க் கின்பருள வயங்குநடத் தரசே