அருள்வெளியில் ஆனந்த வடிவி னால்நின் றாடுகின்ற பெருவாழ்வே அரசே இந்த மருள்வலையில் அகப்பட்ட மனத்தால் அந்தோ மதிகலங்கி மெய்ந்நிலைக்கோர் வழிகா ணாதே இருள்நெறியில் கோலிழந்த குருட்டூ மன்போல் எண்ணாதெல் லாம்எண்ணி ஏங்கி ஏங்கி உருள்சகடக் கால்போலுஞ் சுழலா நின்றேன் உய்யும்வகை அறியேனிவ் வொதிய னேனே