அரைக்கணமும் தரியேன்நான் அணையவா ரீர் ஆணைஉம்மேல் ஆணைஎன்னை அணையவா ரீர் புரைக்கணங்கண் டறியேன்நான் அணையவா ரீர் பொன்மேனிப் புண்ணியரே அணையவா ரீர் வரைக்கணஞ்செய் வித்தவரே அணையவா ரீர் மன்றில்நடிக் கின்றவரே அணையவா ரீர் இரைக்கணவு தருணமிதே அணையவா ரீர் என்னுடைய நாயகரே அணையவா ரீர் அணையவா ரீர்