அரைசே அடியர்க் கருன்குகனே அண்ணா தணிகை ஐயாவே விரைசேர் கடம்பமலர்ப்புயனே வேலா யுதக்கை மேலோனே புரைசேர் மனத்தால் வருந்திஉன்றன் பூம்பொற் பதத்தைப் புகழ்கில்லேன் தரைசேர் வாழ்வில் தயங்குகின்றேன் அந்தோ நின்று தனியேனே
அரைசே குருவே அமுதே சிவமே அணியே மணியே அருளே பொருளே அந்தோ வந்தாள் எந்தாய் எந்தாய் அம்பல நம்பதி யே