அரைசேநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும் அருட்பெருஞ்சோ தியைப்பெற்றே அகமகிழ்தல்வேண்டும் வரைசேர்எவ் வுலகமும்ஓர் ஒழுக்கமுறல் வேண்டும் மடிந்தாரை மீளவும்நான் வருவித்தல் வேண்டும் புரைசேரும் கொலைநெறியும் புலைநெறியும் சிறிதும் பொருந்தாமல் எவ்வுயிரும் புரிந்துவத்தல் வேண்டும் உரைசேர்மெய்த் திருவடிவில் எந்தாயும் நானும் ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல்வேண் டுவனே