அரைமதிக் குறழும் ஒண்ணுதல் வாட்கண் அலர்முலை அணங்கனார் அல்குல் பூரைமதித் துழலும் மனத்தினை மீட்டுன் பொள்ளாடிக் காக்குநாள் உளதோ பரைமதித் திடஞ்சேர் பராபரற் கருமைப் பாலனே வேலுடை யவனே விரைமதித் தோங்கும் மலர்ப்பொழில் தணிகை வெற்பினில் ஒளிரும்மெய் விளக்கே