அறங்கனிந்த அருட்கொடிஎன் அம்மைஅமு தளித்தாள் அகிலாண்ட வல்லிசிவா னந்திசௌந் தரிசீர்த் திறங்கலந்த நாதமணிச் சிலம்பணிந்த பதத்தாள் சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப மறங்கனிந்தார் மயக்கமெலாந் தெளியமணிப் பொதுவில் மாநடஞ்செய் துரையேநின் வண்மைதனை அடியேன் புறங்கவியப் பாடுகின்றேன் அகங்கவியப் பாடும் புண்ணியரெல் லாம்இவன்ஓர் புதியன்எனக் கொளவே