அறங்காதல் செய்தேனை ஆண்டுகொண் டிங்கே அருட்பெருஞ் சோதியாய் ஆடும் அழகர் உறங்காத வண்ணஞ்சிற் றம்பலம பாடி உதிக்கின்ற ஒண்மையில் துதிக்கின்ற போது புறங்காதல் செய்வார்போல் செய்யாதே பெண்ணே பொற்கம்பம் ஏறினை சொர்க்கம்அங் கப்பால் இறங்காதே என்கின்றார் என்னடி அம்மா என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா