அறங்குலவு தோழிஇங்கே நீஉரைத்த வார்த்தை அறிவறியார் வார்த்தைஎத னால்எனில்இம் மொழிகேள் உறங்குவதும் விழிப்பதும்பின் உண்ணுவதும் இறத்தல் உறுவதுடன் பிறத்தல்பல பெறுவதுமாய் உழலும் மறங்குலவும் அணுக்கள்பலர் செய்தவிர தத்தால் மதத்தலைமை பதத்தலைமை வாய்த்தனர்அங் கவர்பால் இறங்கலிலேன் பேசுதலால் என்பயனோ நடஞ்செய் இறைவர்அடிப் புகழ்பேசி இருக்கின்றேன் யானே