அறத்தாயை ஓர்புடை கொண்டோ ர் புடைமண் அளந்தமுகில் நிறத்தாயை வைத்துல கெல்லாம் நடத்தும் நிருத்தஅண்டப் புறத்தாய்என் துன்பம் துடைத்தாண்டு மெய்அருட் போதந்தந்த திறத்தாய் வயித்திய நாதா அமரர் சிகாமணியே