அறம்பழுக்கும் தருவேஎன் குருவே என்றன் ஆருயிருக் கொருதுணையே அரசே பூவை நிறம்பழுக்க அழகொழுகும் வடிவக் குன்றே நெடுங்கடலுக் கணையளித்த நிலையே வெய்ய மறம்பழுக்கும் இலங்கைஇரா வணனைப் பண்டோ ர் வாளினாற் பணிகொண்ட மணியே வாய்மைத் திறம்பழுக்கும் ஸ்ரீராம வள்ள லேநின் திருவருளே அன்றிமற்றோர் செயலி லேனே