அறிந்தன அறிந்தாங் கறிந்தறிந் தறியா தையகோ ஐயகோ அறிவின் மறிந்தன மயர்ந்தேம் எனமறை அனந்தம் வாய்குழைந் துரைத்துரைத் துரையும் முறிந்திட வாளா இருந்தஎன் றறிஞர் மொழியும்ஓர் தனிப்பெருந் தலைவன் செறிந்தென துளத்தில் சேர்ந்தனன் அவன்றன் திருவுளம் தடுப்பவர் யாரே