அறிந்தானை அறிவறிவுக் கறிவா னானை அருட்பெருஞ்சோ தியினானை அடியேன் அன்பில் செறிந்தானை எல்லாஞ்செய் வல்ல சித்தாய்ச் சிறந்தானைச் சிறுநெறியில் சென்றார் தம்மைப் பிறிந்தானை என்னுளத்தில் கலந்து கொண்ட பிரியமுள பெருமானைப் பிறவி தன்னை எறிந்தானை எனைஎறியா தெடுத்தாண் டானை எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே