அறிந்திலை யோஎன் பாடெலாம் என்றே அழைத்தனன் அப்பனே என்னை எறிந்திடா திந்தத் தருணமே வந்தாய் எடுத்தணைத் தஞ்சிடேல் மகனே பிறிந்திடேம் சிறிதும் பிறிந்திடேம் உலகில் பெருந்திறல் சித்திகள் எல்லாம் சிறந்திட உனக்கே தந்தனம் எனஎன் சென்னிதொட் டுரைத்தனை களித்தே