பாடல் எண் :915
அறியேன் உன்தன் புகழ்ப்பெருமை அண்ணா ஒற்றி அப்பாநான்
சிறியேன் எனினும் நினைஅன்றித் தெறியேன் மற்றோர் தேவர்தமை
வெறியேன் பிழையைக் குறித்தெனைக்கை விட்டால் என்செய் வேன்அடியேன்
நெறியே தருதல் நின்கடன்காண் நின்னைப் பணிதல் என்கடனே
பாடல் எண் :3608
அறியேன் சிறியேன் செய்தபிழை
அனைத்தும் பொறுத்தாய் அருட்சோதிக்
குறியே குணமே பெறஎன்னைக்
குறிக்கொண் டளித்தாய் சன்மார்க்க
நெறியே விளங்க எனைக்கலந்து
நிறைந்தாய் நின்னை ஒருகணமும்
பிறியேன் பிறியேன் இறவாமை
பெற்றேன் உற்றேன் பெருஞ்சுகமே
Dear sanmarges . You are welcome to register at FREE of cost.