அறிவாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும் ஐந்தொழில்நான் புரிந்துலகில் அருள்விளக்கல் வேண்டும் செறியாத கரணமெலாம் செறித்தடக்கல் வேண்டும் சித்தாந்த வேதாந்தப் பொதுசிறத்தல் வேண்டும் எறியாதென் எண்ணமெலாம் இனிதருளல் வேண்டும் எல்லாஞ்செய் வல்லசித்தே எனக்களித்தல் வேண்டும் பிறியாதென் னொடுகலந்து நீஇருத்தல் வேண்டும் பெருமான்நின் தனைப்பாடி ஆடுதல்வேண் டுவனே