அறிவிலாச் சிறிய பருவத்திற் றானே அருந்தலில் எனக்குள வெறுப்பைப் பிறிவிலா தென்னுட் கலந்ததீ அறிதி இன்றுநான் பேசுவ தென்னே செறிவிலாக் கடையேன் என்னினும் அடியேன் திருவருள் அமுதமே விழைந்தேன் எறிவிலாச் சுவைவே றெவற்றினும் விழைவோர் எட்டுணை யேனும்இன் றெந்தாய்