அறிவுடையார் உள்ளகப்போ தலருகின்ற தருணத் தருள்மணத்தே னாகிஉற்ற அடிஇணைகள் வருந்தப் பிறிவுடையேன் இருக்குமிடந் தேடிநடந் தடைந்து பெருங்கதவந் திறப்பித்துப் பேயன்எனை அழைத்துச் செறிவுடையாய் இதுவாங்கென் றுதவவும்நான் மறுப்பத் திரும்பவும்என் கைதனிலே சேரஅளித் தனையே பொறிவறியேன் அளவினில்உன் கருணையைஎன் என்பேன் பொற்பொதுவில் நடம்புரியும் பூரணவான் பொருளே