அறையாத மிகுபெருங்காற் றடித்தாலும் சிறிதும் அசையாதே அவியாதே அண்டபகி ரண்டத் துறையாவும் பிண்டவகைத் துறைமுழுதும் விளங்கத் தூண்டாதே விளங்குகின்ற ஸோதிமணி விளக்கே மறையாதே குறையாதே களங்கமும் இல்லாதே மயக்காதே பனிக்காதே வயங்குகின்ற மதியே இறையாய்எவ் வுயிரகத்தும் அகப்புறத்தும் புறத்தும் இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே