Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :533
அற்புத மான அழகனடி - துதி
அன்பர்க் கருள்செய் குழகனடி
பாடல் எண் :3876
அற்புத நிறைவே சற்புதர் அறிவில் 

அறிவென அறிகின்ற அறிவே 
சொற்புனை மாயைக் கற்பனை கடந்த 

துரியநல் நிலத்திலே துலங்கும் 
சிற்பரஞ் சுடரே தற்பர ஞானச் 

செல்வமே சித்தெலாம் புரியும் 
பொற்புலம் அளித்த நற்புலக் கருத்தே 

பொதுநடம் புரிகின்ற பொருளே   

 () சற்புதர் - நல்லறிவுடையவர்
பாடல் எண் :4542
அற்புத ஸோதி மருந்து - எல்லாம் 

ஆகியன் றாகி அமர்ந்த மருந்து 
தற்பதம் தந்த மருந்து - எங்கும் 

தானேதா னாகித் தனித்த மருந்து  ஞான

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.