அற்புதப்பொன் அம்பலத்தே ஆடுகின்ற அரசே ஆரமுதே அடியேன்றன் அன்பேஎன் அறிவே கற்புதவு பெருங்கருணைக் கடலேஎன் கண்ணே கண்ணுதலே ஆனந்தக் களிப்பேமெய்க் கதியே வெற்புதவு பசுங்கொடியை மருவுபெருந் தருவே வேதஆ கமமுடியின் விளங்கும்ஒளி விளக்கே பொற்புறவே இவ்வுலகில் பொருந்துசித்தன் ஆனேன் பொருத்தமும் நின்திருவருளின் பொருத்தமது தானே