அற்றமும் மறைக்கும் அறிவிலா தோடி ஆடிய சிறுபரு வத்தே குற்றமும் குணங்கொண் டென்னைஆட் கொண்ட குணப்பெருங் குன்றமே குருவே செற்றமும் விருப்பும் தீர்த்தமெய்த் தவர்தம் சிந்தையில் இனிக்கின்ற தேனே நற்றக வுடைய நாதனே உனையே நம்பினேன் கைவிடேல் எனையே