அலப்பற விளங்கும் அருட்பெரு விளக்கே அரும்பெருஞ் சோதியே சுடரே மலப்பிணி அறுத்த வாய்மைஎம் மருந்தே மருந்தெலாம் பொருந்திய மணியே உலப்பறு கருணைச் செல்வமே எல்லா உயிர்க்குளும் நிறைந்ததோர் உணர்வே புலப்பகை தவிர்க்கும் பூரண வரமே பொதுநடம் புரிகின்ற பொருளே