அலைகடலும் புவிவரையும் அனல்கால் நீரும் அந்தரமும் மற்றைஅகி லாண்டம் யாவும் நிலைகுலையா வண்ணம்அருள் வெளியி னூடு நிரைநிரையா நிறுத்திஉயிர் நிகழும் வண்ணம் தலைகுலையாத் தத்துவஞ்செய் திரோதை யென்னும் தனியாணை நடத்திஅருள் தலத்தில் என்றும் மலைவறவீற் றிருந்தருளும் அரசே முத்தி வழித்துணையே விழித்துணையுள் மணியாம் தேவே