அல்லார்க்கும் சூழலார்மேல் ஆசை வைப்பேன் ஐயாநின் திருத்தாள்மேல் அன்பு வையேன் செல்லார்க்கும் பொழில்தணிகை எங்கே என்று தேடிடேன் நின்புகழைச் சிந்தை செய்யேன் கல்லார்க்கும் கடுமனத்தேன் வன்க ணேன்புன் கண்ணினேன் உதவாத கையேன் பொய்யேன் எல்லார்க்கும் பொல்லாத பாவி யேன்யான் ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே