அல்லாலம் உண்டமிடற் றாரமுதை அற்புதத்தைக் கல்லால நீழல்அமர் கற்பகத்தைச் - சொல்ஆர்ந்த விண்மணியை என்உயிரை மெய்ப்பொருளை ஒற்றியில்என் கண்மணியை நெஞ்சே கருது