அல்விலங்கு செழுஞ்சுடராய் அடியார் உள்ளத் தமர்ந்தருளும் சிவகுருவே அடியேன் இங்கே இல்விலங்கு மடந்தையென்றே எந்தாய் அந்த இருப்புவிலங் கினைஒழித்தும் என்னே பின்னும் மல்விலங்கு பரத்தையர்தம் ஆசை என்னும் வல்விலங்கு பூண்டந்தோ மயங்கி நின்றேன் புல்விலங்கும் இதுசெய்யா ஓகோ இந்தப் புலைநாயேன் பிழைபொறுக்கில் புதிதே அன்றோ