அல்வைத்த நெஞ்சால் அழுங்குகின்ற நாயடியேன் சொல்வைத்த உண்மைத் துணையே இணைத்தோள்மேல் வில்வத் தொடைஅணிந்த வித்தகனே நின்னுடைய செல்வத் திருவடியின் சீர்காணப் பெற்றிலனே