அளந்திடுவே தாகமத்தின் அடியும்நடு முடியும் அப்புறமும் அப்பாலும் அதன்மேலும் விளங்கி வளர்ந்திடுசிற் றம்பலத்தே வயங்கியபே ரொளியே மாற்றறியாப் பொன்னேஎன் மன்னேகண் மணியே தளர்ந்தஎனை அக்கணத்தே தளர்வொழித்தா னந்தம் தந்தபெருந் தகையேஎன் தனித்ததனித் துணைவா உளந்தருசம் மதமான பணிஇட்டாய் எனக்கே உன்பணியே பணியல்லால் என்பணிவே றிலையே