அளவிறந்த நெடுங்காலம் சித்தர் யோகர் அறிஞர்மலர் அயன்முதலோர் அனந்த வேதம் களவிறந்தும் கரணாதி இறந்தும் செய்யும் கடுந்தவத்தும் காண்பரிதாம் கடவு ளாகி உளவிறந்த எம்போல்வார் உள்ளத் துள்ளே ஊறுகின்ற தெள்ளமுத ஊற லாகிப் பிளவிறந்து பிண்டாண்ட முழுதுந் தானாய்ப் பிறங்குகின்ற பெருங்கருணைப் பெரிய தேவே