அளவிலா உலகத் தனந்தகோ டிகளாம் ஆருயிர்த் தொகைக்குளும் எனைப்போல் இளகிலா வஞ்ச நெஞ்சகப் பாவி ஏழைகள் உண்டுகொல் இலைகாண் தளர்விலா துனது திருவடி எனும்பொற் றாமரைக் கணியனா குவனோ களவிலார்க் கினிய ஒற்றிஎம் மருந்தே கனந்தரும் கருணையங் கடலே