அளவெலாங் கடந்த பெருந்தலை அண்ட அடுக்கெலாம் அம்மஓர் அணுவின் பிளவில்ஓர் கோடிக் கூற்றில்ஒன் றாகப் பேசநின் றோங்கிய பெரியோன் களவெலாந் தவிர்த்தென் கருத்தெலாம் நிரப்பிக் கருணையா ரமுதளித் துளமாம் வளவிலே புகுந்து வளர்கின்றான் அந்தோ வள்ளலைத் தடுப்பவர் யாரே