அளவையெலாங் கடந்துமனங் கடந்து மற்றை அறிவையெலாங் கடந்துகடந் தமல யோகர் உளவையெலாங் கடந்துபதங் கடந்து மேலை ஒன்றுகடந் திரண்டுகடந் துணரச் சூழ்ந்த களவையெலாங் கடந்தண்ட பிண்ட மெல்லாம் கடந்துநிறை வானசுகக் கடலே அன்பர் வளவையெலாம் இருளகற்றும் ஒளியே மோன வாழ்வேஎன் உயிர்க்குயிராய் வதியும் தேவே