அள்ளற் பழனத் திருவொற்றி யழக ரிவர்தம் முகநோக்கி வெள்ளச் சடையீ ருள்ளத்தே விருப்பே துரைத்தாற் றருவலென்றேன் கொள்ளக் கிடையா வலர்குமுதங் கொண்ட வமுதங் கொணர்ந்தின்னு மெள்ளத் தனைதா வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ