அள்ளிக் கொடுக்கும் கருணையினார் அணிசேர் ஒற்றி ஆலயத்தார் வள்ளிக் குவந்தோன் தனைஈன்ற வள்ளல் பவனி வரக்கண்டேன் துள்ளிக் குதித்தென் மனம்அவரைச் சூழ்ந்த தின்னும் வந்ததிலை எள்ளிக் கணியா அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே