அழகனே ஞான அமுதனே என்றன் அப்பனே அம்பலத் தரசே குழகனே இன்பக் கொடிஉளம் களிக்கும் கொழுநனே சுத்தசன் மார்க்கக் கழகநேர் நின்ற கருணைமா நிதியே கடவுளே கடவுளே எனநான் பழகநேர்ந் திட்டேன் இன்னும்இவ் வுலகில் பழங்கணால் அழுங்குதல் அழகோ