அழகுநிறைந் திலகஒரு திருமேனி தரித்தே அடியேன்முன் எழுந்தருளி அருள்நகைகொண் டடியார் கழகநடு எனைஇருத்தி அவர்க்கெல்லாம் நீறு களித்தருளி என்னளவிற் கருணைமுக மலர்ந்து குழகியற்செஞ் சுடர்ப்பூவைப் பொக்கணத்தில் எடுத்துக் கொடுத்தருளி நின்றனைநின் குறிப்பறியேன் குருவே மழகளிற்றின் உரிவிளங்க மணிப்பொதுவிற் சோதி மயவடிவோ டின்பநடம் வாய்ந்தியற்றும் பதியே