அழிதரும் உலக வாழ்வினை மெய்யென் றலைந்திடும் பாவியேன் இயற்றும் பழிதரும் பிழையை எண்ணுறேல் இன்று பாதுகாத் தளிப்பதுன் பரமே மொழிதரும் முக்கட் செங்கரும் பீன்ற முத்தமே முக்தியின் முதலே கொழிதரும் அருவி பொழிதருந் தணிகைக் குன்றமர்ந் திடுகுணக் குன்றே