அழிந்த வாழ்க்கையின் அவலமிங் கனைத்தும் ஐயம் இன்றிநீ அறிந்தனை நெஞ்சே கழிந்த எச்சிலை விழைந்திடு வார்போல் கலந்து மீட்டுநீ கலங்குகின் றனையே மொழிந்த முன்னையோர் பெறும்சிவ கதிக்கே முன்னு றாவகை என்னுறும் உன்னால் இழிந்த நாயினும் கடையனாய் நின்றேன் என்செய் வேன்உனை ஏன்அடுத் தேனே